Sun. Sep 15th, 2024

வீடு புகுந்த கொள்ளையர்களுடன் ஏற்பட்ட மோதலில் தாயும் மகனும் படுகாயம், குடத்தனையில் பயங்கரம்

வீடு ஒன்றினுள் புகுந்த கொள்ளையர்களுடன் வீட்டார் மோதிக்கொண்டதில் தாயும் மகனும் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் இன்று அதிகாலை  சனிக்கிழமை(14)  1.30 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;

குடத்தனை மேற்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இனந்தெரியாத நால்வர் அதிகாலை வேளை உள் நுளைந்தனர் இதனை அவதானித்த வீட்டிலிருந்த இளைஞர்   கூக்குரல் இட்டபோது கொள்ளையர்கள் அவரை தாக்க முற்பட்டனர்.

இதனால் கொள்ளையர்களுக்கு வீட்டிலிருந்த இளைஞருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் வீட்டின் உள் அறையில் படுத்திருந்த தாயாரும் வெளியில் வந்துள்ளார்.

இதன்போது கொள்ளையர்களின் தாக்குதலில் 36 வயதுடைய ஜெயக்குமார் ரஜீபன், மற்றும்  69 வயதுடைய தாயாரான  ஜெயக்குமார் பரமேஸ்வரி ஆகியோர்   படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக

பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

கொள்ளையர்களுடன் இடம்பெற்ற கைகலப்பில் கொள்ளையர் ஒருவர் காயமடைந்ததாகவும் அவரை தூக்கிக் கொண்டு ஏனைய கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

தப்பிச் சென்றவர்களை தடயங்களை போலீசார் தேடி வருகின்ற போதிலும் யாரும் இதுவரை சிக்கவில்லை.

பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த ஐந்து மாதத்திற்குள் ஆறாவது கொள்ளை சம்பவம் இதுவாக இடம்பெற்றுள்ளது.

ஆனால் இக் கொள்ளை  சம்பவங்கள் தொடர்பாக இதுவரை பருத்தித்துறை பொலிஸாரினால் எவரும் கைது செய்யப்படாமல் உள்ளமை பொதுமக்களிடையே விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்