வீடு புகுந்து வாள்வெட்டு. கொக்குவிலில் வாள்வெட்டு குழு அட்டகாசம்.
கொக்குவில் மேற்கு பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த ரவுடி கும்பல் வீட்டிலிருந்தவா்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் நடாத்தியுள்ளதுடன், வீட்டை அடித்து நொருக்கியுள்ளனா்.
4 மோட்டார் சைக்கிள்களில் 10 பேர் கொண்ட கும்பல் முகத்தை கறுத்தத் துணியால் கட்டியவாறு வீட்டுக்குள் நுழைந்தது. அவர்கள் கைகளில் வாள்கள், கத்திகள் மற்றும் கம்பிகள் காணப்பட்டன.
வீட்டுக்குள் புகுந்து தளபாடங்களை அடித்து சேதப்படுத்தியதுடன் வீட்டிலிருந்த உடமைகளை நாசமாக்கினர். வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்திவிட்டு கும்பல் தப்பித்தது
என்று யாழ்ப்பாணம் பொலிஸாரின் விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.