Fri. Apr 19th, 2024

விளையாட்டு மனப்பான்மையை மாணவர்களிடத்தே விதைத்த விருந்தினர்கள் – உடற்கல்வி ஆசிரியர் புகழாரம்.

பாடசாலையின் இல்ல மெய்வல்லுநர் போட்டியிலே அதிகாரிகள் என்ற ஏற்றத்தாழ்வு பார்க்காமல் பலரும் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்து மாணவர்களிடையே சிறந்ததொரு விளையாட்டு மனப்பான்மையை வளர்த்துக் கொண்டுள்ளதாக அச்சுவேலி புனித தெரேசாள் மகளிர் கல்வி உடகல்வி ஆசிரியர் க.கனகராசா புகழாரம் சூட்டியுள்ளார்.

அச்சுவேலி புனித தெரேசாள் மகளிர் கல்லூரியின் இல்ல மெய்வல்லுநர் போட்டி நேற்று வியாழக்கிழமை கல்லூரி முதல்வர் அருட்சகோதரி அருள்மறியா தலைமையில் நடைபெற்றது.
இதில் யாழ்ப்பாண கல்வி வலய உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.சாரங்கன் கலந்து கொண்டார். இந்நிகழ்விற்கு முன்னாள் வடமாகாண உடற்கல்வி பணிப்பாளரும், முன்னாள் மடு வலயக் கல்விப் பணிப்பாளரும், தற்போது வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளருமான க.சத்தியபாலன் அவர்களும்,  வடமராட்சி கல்வி வலய உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் ப.பார்த்தீபன் அவர்களும் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களையும், பதக்கங்களையும் வழங்கிக் கெளரவித்தனர். பிரதம விருந்தினரின் வேண்டுகோளுக்கிணங்க முதலாவது சான்றிதழை வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் வழங்கி கெளரவித்தார். ஒருவருகொருவர் விட்டுக் கொடுப்பு மனப்பான்மையையுடன் எவ்வாறு வாழ வேண்டும் என்பதனையும் இந்நிகழ்வு சுட்டிக்காட்டியது.
பாடசாலையின் இல்ல மெய்வல்லுநர் போட்டியில் வேறு கல்வி வலயப் பணிப்பாளரும்,  உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளரும் கலந்து கொள்வது இதுவே முதல் தடவை. விளையாட்டு வீரர்கள் அதிகார ஏற்றத் தாழ்வுகள் பார்க்காது எவ்வாறு பழக வேண்டும் என்ற உன்னதமான செயற்பாட்டை மாணவர்களிடையே விதைத்துச் சென்றுள்ளதாகவும் உடற்கல்வி ஆசிரியர் குறிப்பிட்டார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்