விளக்கு பிடிப்பது தான் அபிவிருத்தியா, வடமராட்சி மக்கள் விசனம்
நெல்லியடி புதிய சந்தை பகுதியில் கடிநாய் இது வரை 20 க்கு மேற்பட்டவர்களை கடித்து குதறியுள்ளது. பொதுமக்கள் மற்றும் சந்தைக்கு பொருட்கள் வாங்க செல்பவர்கள் பயத்துடன் சந்தைக்கு செல்லவேண்டியுள்ளது. வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் கவனத்துக்கு பொதுமக்கள் இதனை கொண்டு சென்றும் ஒருவித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என விசனம்கொண்டுள்ளார்கள். 100 மில்லியன் ரூபாவுக்குமேல் குத்தகை வருமானமாக பெறும் பிரதேச சபை வீதிகளுக்கு விளக்கு பொருத்துவதுதான் பிரதேச அபிவிருத்தி என்று செயற்படுவதாக மக்கள் குறைபாடுகொண்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்