விரைவில் கூட்டணியும் தயார் , வேட்பாளரும் கட்சியின் கொளகைகளுக்கு ஏற்ப அறிவிக்கப்படுவார் -ரணில்
தேசிய ஜனநாயக கூட்டணி விரைவில் ஏற்படுத்தப்படும் என்று பிரதமர் ரணில் விசக்ரமசிங்க தெரிவித்தார். நேற்றைய தினம் கண்டியில் போகம்பர கலாச்சார நிலையத்தை திறந்து வைக்கும் பொழுதே இதனை அவர் தெரிவித்தார். கூட்டணி கட்சிகளுடன் ஒரு நிலைப்பாட்டுக்கு வந்துவிட்டோம், கூட்டணி அமைக்கப்பட்டவுடன் எமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரயும் எங்களது கட்சியின் கொள்கைகளுக்கு ஏற்றாற்போல் அறிவிப்போம்.
இதன்மூலம் கரு ஜெயசூர்யாவை அறிவிப்பதற்கு ரணில் தரப்பு முயற்சிப்பதாக தகவல்கள் வெளிவருகிக்கின்றன. சஜித் பிரேமதாசாவுக்கு பாரிய ஆதரவு கட்சியில் இருந்த பொழுதும் , மூத்த உறுப்பினர்களும் , கொழும்பு மாவட்டத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் அவரை எதிர்ப்பதாலேயே ரணிலால் , சஜித்தை ஜனாதிபதி வேட்பளராக அறிவிக்கமுடியாமல் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன