விரைவில் எகிறவுள்ள கோதுமை, பால் பவுடர், சிமென்ட் மற்றும் சமையல் எரிவாயு விலைகள்
கோதுமைமா, பால் பவுடர், சிமென்ட் மற்றும் உள்நாட்டு சமையல் எரிவாயு போன்ற அத்தியாவசிய பொருட்களின் மீது சமீபத்தில் விதிக்கப்பட்ட விலைக் கட்டுப்பாட்டை அரசாங்கம் நீக்கியுள்ளது என்று கூட்டுறவு சேவைகள், சந்தைப்படுத்தல் மேம்பாடு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு பிரதி அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார்
ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்ற விசேட கூட்டத்தைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார் .
இந்த அத்தியாவசிய பொருட்களின் விலையை பாரபட்சமின்றி அதிகரிப்பதன் மூலம் பொதுமக்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்றும் ,உற்பத்தியாளர்கள் தாறுமாறாக விலைகளை உயர்த்தினால், அரசாங்கம் மீண்டும் விலைகளில் தலையிட வேண்டும் என்றும் ஜனாதிபதி இந்த கூட்டத்தில் தெரிவித்தவுள்ளார் .
எனவே, விலைகளை நிலையான அளவில் பராமரிப்பது உற்பத்தியாளர்கள் மற்றும் டீலர்களின் கைகளில் உள்ளது, என்று தெரிவித்த அமைச்சர் , நாளைக்குள் இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படும் என்றார்.
அந்நியச்செலாவணிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடுகள் காரணமாக இறக்குமதியில் தடைகள் ஏற்பட்டுள்ளதுடன் அமெரிக்க டாலருக்கு எதிராக இலங்கை நாணய பெறுமதி வீழ்ச்சி அடையும் நிலையில் அரசாங்கத்தால் விலை கட்டுப்பாடு விதிக்க முடியாது என்பதால் அரசாங்கம் இந்த கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளதாக தெரியவருகிறது . இதனால் இந்த அத்தியாவசிய பொருட்களின் விலையில் பாரிய மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது