Sat. May 16th, 2026

விராட் கோலியே தொடர்ந்தும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் .

 

ஐபிஎல் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் புதிய பயிற்சியாளர் மற்றும் இயக்குனர் இருவரும், கேப்டன் பதவியில் இருந்து கோலியை நீக்கப் போவதில்லை என அறிவித்துள்ளனர். கடந்த ஏழு ஆண்டுகள் நடந்த ஐபிஎல் தொடர்களில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு கேப்டனாக இருக்கிறார் விராட் கோலி. அவரது தலைமையில் அந்த அணி இது வரை எந்த ஐபிஎல் கோப்பையையும் வென்றதில்லை.

இரண்டு முறை இரண்டாம் இடம் பிடித்துள்ள இந்த அணி , மொத்தத்தில் நான்கு முறை பிளே-ஆஃப் சென்றதை தவிர அந்த அணியால் ஒரு முறை கூட கோப்பை வெல்ல முடியவில்லை.

கடந்த 2019 ஐபிஎல் தொடரிலும் மோசமாக செயல்பட்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கடைசி இடத்தை பிடித்து படு தோல்வியை தழுவியது .இந்த நிலையில் கோலியின் தலைமை பொறுப்பு இந்த முறை காலி ஆகும் என்று எதிர் பார்த்து காத்திருந்த பெங்களூரை அணியின் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed