Sun. Sep 6th, 2026

வியாழக்கிழமை வடக்கில் மழை

எதிர்வரும் 5ம்திகதி முதல் வடமாகாணம் முழுவதும் மிதமான மழை கிடைக்கக் கூடிய வாய்ப்புள்ளதாக யாழ் பல்கலைக் கழக புவியியல்துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா அறிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் 05.05.2022 வியாழக்கிழமை அன்று தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ஒன்று உருவாக வாய்ப்புள்ளது. இது மேலும் வலுப்பெற்று தீவிர தாழமுக்கமாக மாறி வடக்கு நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது வடக்கு மாகாணம் முழுவதும் அவ்வப்போது வெப்ப சலன( மேற்காவுகை அல்லது உகைப்பு) மழை கிடைத்து வருகின்றது.
எனினும் எதிர்வரும் 05.05.2022 முதல் வடக்கு மாகாணம் முழுவதும் பரவலாக மிதமான மழை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed