Sun. Apr 12th, 2026

வியாபாரத்தில் நஷ்டம் ; மனைவி, மகனை கொன்ற தந்தை!!

 

இந்தியாவின் பெங்களூருவில் ஒருவர் தனது நிதி நிறுவனத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் தனது மனைவி மற்றும் மகனை கொலை செய்யதுள்ளார். அதனை அவரது மகள் வீடியோவாக பதிவு செய்துள்ளார். பெங்களூருவைச் சேர்ந்த 45 வயது சுரேஷ் என்பவரே இவ் கொடூரச் செயலை செய்துள்ளார்.

தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் குடும்பத்தோடு தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளார். முதலில் தனது 38 வயது மனைவி கீதாவை கொலைச் செய்த பின் தனது 12 வயது மகன் வருணை கொலை செய்துள்ளார்.

மகனின் கழுத்தில் போர்வையைச் சுற்றி மின் விசிறியில் தொங்கவிட கழுத்து இறுக்கி மகன் மரணமடைந்துள்ளான்.

அவரது 17 வயது மகள் சம்பவத்தைப் பார்த்த கதறியபடி இதை தொலைபேசியில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

இளம் பெண் அக்கம் பக்கத்தினரிடம் இதை தெரிவிக்க அவர்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸாரிடம் அந்த நபர் அளித்த வாக்குமூலத்தில், “எனக்கு 45 வயதாகிறது. நான் ஒரு நுன்நிதி நிறுவனம் நடத்தி வந்தேன். அதில் மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டது. அதனால், குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவு செய்தோம்.

என் மனைவி, மகனைக் கொலை செய்தேன். ஆனால், என் மகள் கூச்சலிட்டு அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்துவிட்டார்” என்றார்.

இதையடுத்து பொலிஸார் அந்த நபரை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed