Thu. May 21st, 2026

விமான விபத்து குறித்து ஆராய்வதற்கு சீனா ஆய்வு குழு வருகிறது.

ஹப்புத்தளை பகுதியில் விமானப்படை விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் தொடா்பாக ஆராய்வதற்காக தொழநுட்ப ஆய்வு குழு ஒன்று சீனாவிலிருந்து இலங்கைக்கு வருகைதரவுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை காலை ஹப்புத்தளையில் விபத்துக்குள்ளான Y.12 ரக விமானம் குறித்து ஆய்வு செய்ய சீனாவிலிருந்து தொழில்நுட்பவியலாளர்கள் குழுவொன்று

வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விமானம் பயணித்துக் கொண்டிருக்கும் போது திடீரென விபத்துக்குள்ளாகியதற்கான காரணத்தைக் கண்டறியவே

இக்குழு இங்கு வரவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. விமானத்தின் பெறுமதி 3 மில்லியன் டொலர் என தெரிவிக்கப்படுகின்றது. சீன ஹேபிங் நிறுவனம் தயாரிப்பான

இந்த விமானத்தில் 15 பேர் பயணிக்க முடியும். அன்று இடம்பெற்ற விபத்தில் இரு விமானிகள் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed