விபச்சாரத்தில் ஈடுபட்ட வெளிநாட்டு பெண்கள் உட்பட 6 பேர் கைது
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் விபச்சார பெண்களுக்கு தங்குமிட வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து , அவர்களை நாட்டின் பல பகுதிகளுக்கும் அனுப்பி விபச்சார கும்பல் ஒன்று விபச்சார நடவடிக்கையில் ஈடுப்படுத்துவதாக மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு 7 மணியளவில் குற்றிப் பிரிவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது, பெண்களை இந்த இடத்திற்கு அழைத்து வந்து தங்குமிட வசதிகளை செய்து கொடுத்த இரு நபர்களும் , விபச்சாரத்தில் ஈடுப்படுபட்ட சந்தேகத்தின் பேரில் மேலும் நான்கு பெண்களும் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் வெளிநாட்டில் இருந்து வந்து விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட இரு பெண்களும் அடக்கம் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பேலியகொட மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவினர் விபச்சார நடவடிக்கை தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.