விடைத்தாள் திருத்துவோருக்கு இரு நாள் விடுமுறை
2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மதிப்பீட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நாளை மறுதினம் 28 மற்றும் மறுநாள் 29ஆம் திகதிகளில் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பரீட்சைகள் திணைக்களம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.
2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மதிப்பீட்டு நடவடிக்கைகளின் முதல் பகுதி, கடந்த 18ஆம் திகதி ஆரம்பமானது.
விடைத்தாள் மதிப்பீட்டு பணியில் ஈடுபடுபவர்களுக்கே இவ்விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.