Mon. Feb 10th, 2025

விடுவிக்கப்படாத பொதுமக்களின் காணிகள் குறித்த பதிவுகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை- மக்கள் விசனம்

விடுவிக்கப்படாத பொதுமக்களின் காணிகள் குறித்த பதிவுகளை மேற்கொள்ளுமாறு ,தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா கோரியுள்ளார்

ஜனாதிபதிக்கும் கூட்டமைப்பினருக்கும் , கடந்த 27ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாகவே இதனை அவர் கோரியுள்ளார்

இதனால் முல்லைத்தீவில் ஆக்கிரமிக்கப்படுள்ள காணிகள் குறித்த விடயங்களை எதிர்வரும் 9ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எதிர்வரும் 12ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தலைமையில் ஒரு கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இந்த பதிவுகள் ஏற்கனவே கிராமசேவகர் முதல் பிரதேச செயலகம், கச்சேரி என பலஇடங்களிலும் ஏற்கனவே இருப்பதாகவும் , கடந்த 2009 ஆண்டு முதல் பல்வேறு இடங்களில் பல்வேறு கட்டங்களில் இந்த பதிவுகளை மேற்கொண்டு வந்துள்ள போதும் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும், பாரளுமன்ற உறுப்பினரின் இந்த கோரிக்கையை இட்டு மக்கள் விசனம் வெளியிட்டுள்ளார்கள்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்