Sat. Dec 6th, 2025

விடுமுறை காலத்திலும் மாணவர்களின் ஒழுக்கம் அனைவராலும் கவனிக்கப்படல் வேண்டும் – சங்கத் தலைவர் ப.தர்மகுமாரன்

விளையாட்டில் ஈடுபடும் மாணவர்கள் பின்பற்றும் ஒழுக்கத்தை ஏன் ஏனையவர்கள் கடைப்பிடிக்க முடியாது என உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் கேள்வி எழுப்பியுள்ளார் .

விளையாட்டில் ஈடுபடும் மாணவர்கள் கடைப்பிடிக்கும் ஒழுக்கத்தை ஏன் ஏனைய மாணவர்களால் பின்பற்ற முடியாதுள்ளது. இதற்கு யார் பொறுப்பு. பாடசாலை மாணவர்களின் ஒழுக்கம் மிக முக்கியமானது. இதை தவிர்த்து அவர்கள் பாடசாலை நாட்களை கழித்துவிட முடியாது. இங்கு மிக முக்கியமாக மாணவர்களின் நடத்தை, உடல் சுத்தம், சிகை அலங்காரம், ஆடைகள் அணிகலன்கள், பேச்சு வழக்குகள் பழக்கவழக்கம் என்பன செல்வாக்கு செலுத்துகின்றன. இதில் விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றும் மாணவர்கள் வலயமட்டம், மாகாணமட்ட போட்டிகளில் கடுமையான விதிமுறைகளின் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றனர்.அதாவது மாணவர்களின் தலைமுடி சீர்செய்யப்படுகிறது. ஆடைகள், நாகரீகமான பேச்சு போன்றன கடுமையான விதிகளின் மூலம் கடைப்பிடிக்கப்படுவதால் விளையாட்டில் ஈடுபடும் மாணவர்களின் ஒழுக்கம் உயர்ந்த நிலையில் உள்ளது. ஆனால் ஏனைய மாணவர்கள் கவனிப்பார் அற்ற நிலையில் ஒழுக்கத்தை காவுகொள்ளுகின்றனர். பாடசாலை கல்வி முடியும் வரை  மாணவனாகவே கருதப்படுகின்றான்.  விடுமுறை காலம் என்றால் மாணவன் அற்ற நிலை என்பது பல மாணவர்களின் எடுகோள். அந்த நேரத்தில் எப்படியும் நடக்கலாம், எப்படியும் செயல்படலாம் என்ற எண்ணம். எனவே இந்த விடயத்தில் பெற்றோர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் புரிந்துணர்வுடன் வினைதிறனாக செயலாற்றுவதுடன். சிகைஅலங்கரிப்பு நிலையம். ஆடை விற்பனை செய்யும் நிலையங்கள், பாடசாலை மாணவர்களின் ஒழுக்கத்தை கருத்தில் கொண்டு தமது செயல்பாட்டை முன்னெடுக்க வேண்டும்.அத்துடன் தனியார்கல்வி நிலையங்களும் விடுமுறை காலத்தில் சிகை அலங்காரம், நாகரீகமற்ற ஆடைகள் அணிகலன்கள் அணிவதற்கு தடைவிதித்து கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்