Sat. Sep 23rd, 2023

விடுதலை புலிகளின் பொருட்களை தேடி. கிளிநொச்சியில் அகழ்வுப்பணி

கிளிநொச்சி, சிவபுரம் பகுதியில் கடற்படையினரால் விடுதலைப்புலிகளின் பொருட்களை தேடி அகழ்வு பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றதில் முன் அனுமதி பெற்றநிலையில் , கிளிநொச்சி நீதவான் மற்றும் கண்டாவளை பிரதேச செயலர் மற்றும் கிராம சேவையாளர் ஆகியோர் முன்னிலையில் கடற்படையினரால் குறித்த அகழ்வு பணிகள் முன்னடுக்கப்பட்டு வருகின்றது.
விடுதலை புலிகளால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் முக்கிய ஆவணங்கள், பெறுமதியான பொருட்கள் காணப்படலாம் என கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து குறித்த பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது
குறித்த அகழ்வு பணியில் பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்