விடியாத தேசத்தில் முடியாதவர்களை உருவாக்கி வருகிறோம் முயற்சியாளர்களை உருவாக்க விளையாட்டு முக்கியமானது என உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன்

விடியாத தேசத்தில் முடியாதவர்களை உருவாக்கி வருகிறோம் இனி விடியும் தேசத்திற்கு முயற்சியாளர்களை உருவாக்க விளையாட்டு முக்கியமானது என உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் தெரிவித்தார்.
அராலி சரஸ்வதி இந்துக் கல்லூரியின் மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி கல்லூரி அதிபர் பாலமுருகன் தலைமையில் சிறப்புரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சங்கத்தின் தலைவர்
மேலும் தனதுரையில் விளையாட்டே வெற்றியாளனை உருவாக்குகின்றது. இலக்கு நோக்கி பயணிக்க வைக்கின்றது ஏனைய மாணவர்களை விட விளையாட்டில் ஈடுபடும் மாணவர்களுக்கு பாடசாலை பற்றும் சமூகப்பற்றும் அதிகமாக காணப்படும். இவர்களாலேயே எதிர் கால சமூகம் கட்டியெழுப்பப்படும். அதற்கு ஆரோக்கியம் முக்கியம் அதனை விளையாட்டு மைதானமே கொடுக்கிறது. அதனை பெற்றோர்களால் கெடுத்துவிட முடியாது. அறிஞர் ரூசோ கூறியது போல பலரும் ஜம்பது வயதிலே இறந்து விடுகிறார்கள் அவர்களை புதைப்பதற்கே அறுபது, எழுபது வயது எடுகின்றது என கூறினார். அதாவது பலரும் ஐம்பது வயதுடன் தமது முயற்சியை நிறுத்துகின்றனர். அதற்கான காரணம் ஆரோக்கியம் இல்லாது நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையும் மருந்துமாகவே வாழுகின்றனர். இவர்களால் அபிவிருத்தியையோ முயற்சியையோ மேற்கொள்ள முடியாது. எனவே முயற்சி அற்றவன் இறந்ததிற்கு ஒப்பானது தங்கியும் மற்றவர்களால் தாங்கியும் வாழ வேண்டிய சூழ்நிலையே ஏற்படும் இதனைக்கருத்தில் கொண்டு பிள்ளைகளை விளையாட தூண்டி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க வேண்டும் என தனதுரையை நிறைவு செய்தார்.