விஞ்ஞான பிரிவில் கல்விகற்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றின்படி விஞ்ஞான பிரிவில் உயர்கல்வியை தொடரும் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவதாக அதிகரித்துள்ளதாக தெரிகிறது .2014 ஆம் ஆண்டு 38042 மாணவர்கள் உயர்தர விஞ்ஞான பிரிவில் தோற்றியிருந்த அதேவேளை அந்த எண்ணிக்கை தற்போது 41168 ஆக உயர்ந்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. இது அண்ணளவாக 10 விகித அதிகரிப்பை கொண்டுள்ளது. மற்றய பாடத்திட்டங்களுடன் ஒப்பிடும் பொழுது இது அதிகமாக காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. அண்மைய சில வருடங்களாக முன்னெடுக்கப்படும் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களினாலேயே இந்த முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கவேண்டும் என்று கல்வியமைச்சு கருதுகின்றது .