Thu. May 21st, 2026

விஜய் திரைக்கு வந்து 28 வருடங்கள்

இளைய தளபதி விஜய் திரையுலகத்திற்கு வந்து 28 ஆண்டுகள் நிறைவை விஜய்யின் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இளைய தளபதி விஜய் 1992ம் ஆண்டு திரையுலகத்திற்கு வந்துள்ளார். நாளைய தீர்ப்பு திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அவதாரம் எடுத்தவருக்கு சுமார் 3 ஆண்டுகள் தோல்விப் படங்களையே ரசிகர்களுக்கு கொடுத்தார்.

சற்றும் சளைக்காமல் நடித்த விஜய்க்கு விக்கிரமன் இயக்கிய பூவே உனக்காக திரைப்படம் ஒவ்வொரு வீட்டின் செல்லப் பிள்ளையாக வலம் வர அம்மாக்களின் மனதில் இடம்பிடித்தார். அதன் பின்னர் காதலுக்கு மரியாதை திரைப்படம் மூலம் காதலையும் இவ்வளவு அழகாக கொடுக்கலாம் என நடிக்க பெண்கள் மனதிலும் இடம் பிடித்தார்.  திருமலை படத்தின் மூலம் ஆக்சன் ஹீரோவாக மாறி கில்லி, திருப்பாச்சி, சிவகாசி,  போக்கிரி என அடுத்தடுத்து வெற்றிப்படங்களையும் வசூலையும் பார்க்க தொடங்கியது. அண்மைக்காலமாக நடித்த படங்கள் விஜய்க்கு வசூலை அள்ளிக் கொடுத்தது.  துப்பாக்கி,  கத்தி படங்களில் சமூகக் கருத்தையும்,  மெர்சல் திரைப்படத்தில் வைத்தியர்களின் நிலையையும் எடுத்துரைத்து சமூக விழிப்புணர்வு கருத்தையும் கொடுத்தார். மெர்சல் திரைப்படம் 200 கோடி வசூலையும் விளையாட்டை மையமாக கொண்ட பிகில் 300 கோடி வசூலையும் அள்ளி சாதனை படைத்தது. விஜய்யின் 64 வது படமான மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed