Sat. Dec 7th, 2024

விஜய் ஆண்டனியும், இயக்குநர் விஜய் மில்டனும் மீண்டும் கூட்டு …

விஜய் ஆண்டனியும், இயக்குநர் விஜய் மில்டனும் புதிய படத்தை இணைந்து உருவாக்கத் திட்டம் இது கொலைகாரன் படத்தின் வெற்றியே காரணமாம்

நான் படம் மூலம் நடிகரான விஜய் ஆண்டனி சலீம், பிச்சைக்காரன் ஆகிய படங்களின் வெற்றிகளுக்கு பிறகு முழு நேர நடிகரானார் சமீபத்தில் வெளிவந்த கொலைகாரன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

விஜய் மில்டன் தமிழ் சினிமாவில் முக்கியமான ஒளிப்பதிவாளர். இவர் ஆட்டோகிராஃப், காதல், தீபாவளி போன்ற பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். இவர் அழகாய் இருக்கிறாய் பயமாய் இருகிறது படம் மூலம் இயக்குனாராக அறிமுகமானார்.

அந்த படம் தோல்வியில் முடிந்ததை அடுத்து பல காலமாக ஒளிப்பதிவு பணி மட்டும் செய்து கொண்டிருந்த மில்டன், மீண்டும் கோலி சோடா படத்தின் மூலம் மீண்டும் இயக்குனாரானார். இம்முறை படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததால் தொடர்ந்து பத்து என்றதுக்குள்ள, கடுகு போன்ற படங்களை இயக்கி வந்தார்.

அதே நேரத்தில் தனது படங்களை தன் நண்பர்களுடன் சேர்ந்து தயாரித்தும் வருகிறார். இதற்கிடையில் கன்னட மொழியில் படம் ஒன்றை இயக்கி வரும் விஜய் மில்டன் இதற்கு பின் விஜய் ஆண்டனியுடன் இனைய இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. அந்த படத்திற்கு தலைப்பு மழை பிடிக்காத மனிதன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை இன்ஃபினிட்டி ஃபிலிம் வெஞ்சர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்