Sat. May 16th, 2026

விஜய் ஆண்டனியுடன் சேரும் ஸ்ரீதிவ்யா

விஜய் ஆண்டனி நாயகனாகவும் . நாயகியாக ஸ்ரீதிவ்யாவும் நடிக்க கோலிசோடா 2 பட இயக்குனர் விஜய் மில்டன் படம் ஒன்றை இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக இருந்து பின்னர் இயக்குநராகி தனக்கு என்று அழுத்தமாக ஒரு இடத்தை பிடித்தவர் விஜய் மில்டன். இவர் கோலிசோடா 2′ படத்துக்கு பிறகு இந்த படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்துக்கு மழை பிடிக்காத மனிதர் என்று தலைப்பு வைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இ. இசையமைப்பாளர், எடிட்டர் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் ஆண்டனி இப்பொழுது கைவசம் அக்னி சிறகுகள், தமிழரசன், காக்கி ஆகிய மூன்று படங்களை வைத்திருக்கிறார்

அப்படங்களுக்குப் பிறகு விஜய் மில்டன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் . வருத்தப்படாத வாலிபர் சங்க படத்தின் மூலம் திரைக்கு வந்திருந்தார் ஸ்ரீதிவ்யா. அவர் நடிப்பில் கடைசியாக சங்கிலி புங்கிலி கதவ தொற என்ற படம் வெளியாகி சுமாராக ஓடியது .ஸ்ரீதிவ்யா கைவசம் எந்த படமும் தற்பொழுது இல்லை. இதனால் இந்த படம் அவருக்கு ஒரு பிரேக் ஐ கொடுக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed