Wed. Mar 11th, 2026

விஜய்யின் புதிய படத்தில் கமல் – விக்ரம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தில் உலக நாயகன் கமல் சிறப்புத் தோற்றத்திலும், வில்லன்களின் தலைவனாக விக்கிரமும் நடிக்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்தப்படத்தில் சஞ்சய்தத், அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்கவிருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்தநிலையில், இப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகர் விக்ரம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

படத்தின் இறுதிக்காட்சியில் கமல்ஹாசன் ஒரு சிறப்பு தோற்றத்தில் தோன்றலாம் என கூறப்படுகிறது.

மேலும், இத்திரைப்படத்தில் சஞ்சய்தத், அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்டோர் வில்லன்களாக நடிக்கவுள்ளனர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed