விக்கினேஸ்வரா கல்லூரி மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி கையளிப்பு
கரவெட்டி விக்கினேஸ்வரா கல்லூரியைச் சேர்ந்த இரு மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.
விக்கினேஸ்வர கல்லூரியில் 1998 ஆம் ஆண்டு க. பொ.சா/த கல்வி கற்று தற்பொழுது நோர்வே நாட்டில் வதியும் திருமதி.ஜாலினி இராஜசிறி அவர்களினால் கல்லூரியில் தற்பொழுது க.பொ.சா/த இல் கல்வி கற்கும் செல்வி.ஆர்த்திகா சண்முகலிங்கன், செல்வன்.தர்மலிங்கம் யதுசன் ஆகிய மாணவர்களின் போக்குவரத்து தேவையை நிறைவுசெய்ய இரண்டு துவிச்சக்கர வண்டிகளை அன்பளிப்பாக வழங்க உதவியுள்ளார்.