வாழ்க்கை வாழ்வதற்கே மட்டும் வீழ்வதற்கு அல்ல என உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன்
வாழ்க்கை வாழ்வதற்கே மட்டும் வீழ்வதற்கு அல்ல என உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் தெரிவித்துள்ளார்.
உடுவில் பிரதேச செயலகத்தினால் தொற்றாநோய் விழிப்புணர்வு செயல்பாடு முன்னெடுக்கும் நிகழ்வில் வளவாளராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தனதுரையில் மேலைத்தேய நாடுகளிலே தொற்றா நோய் காணப்பட்டது. அபிவிருத்தி அடைந்துவரும் இலங்கை போன்ற நாடுகளில் தொற்று நோய்களே காணப்பட்டது. ஆனால் நாங்கள் எப்பொழுது மேலைத்தேய கலாச்சாரத்தை உள்வாங்கினோமோ அன்றில் இருந்து தொற்றாநோய் இலங்கையில் அனைவரையும் விழுங்கிவருகிறது. இலங்கையை பொறுத்தவரையில் 89வீதமான இறப்பு தொற்றா நோயினாலே ஏற்படுகிறது. அதிலும் 50தொடக்கம்60 வயதிற்கு உட்பட்டவர்களின் இறப்பில் 10பேரில் 4அல்லது5பேர் தொற்றாநோயினால் இறப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கான மிகமுக்கிய காரணம் மேலைத்தேய உணவுகள் ஆன விரைவுணவும் பதப்படுத்தப்பட்ட உணவும் எம்மை ஆக்கிரமித்தமை. உடற்பயிற்சி இல்லாமை. மதுபானம் புகைத்தல் பயன்பாடு அதிகரித்தமை. உளநெருக்கீடு. என்பவற்றுடன் மிகமுக்கியமாக எம்மில் எமக்கு கவனம் இல்லாமை. யாரைக்கேட்டாலும் நேரமில்லை பிள்ளையை அங்குமிங்கும் கொண்டு செல்லுதல் வீட்டில் சமையல் இல்லை. குடும்பமாக மகிழ்ச்சியாய் இல்லாமை போன்றன பலரது வாழ்க்கையை தொலைத்து விடுகின்றன. தனது வாழ்க்கையை மற்றவர்களுக்காக வாழ்பவர்களே அதிகம் அதனால் வாழ்க்கை செயல் இழந்து வெறுப்பு மிக்கதாகவே பலருக்கும் அமைகிறது. இது ஆபத்தானது ஒரு சமூகத்தின் அழிவுக்கு வித்திடுகிறது என்பதை உணரவேண்டும். இரண்டாம் உலகப்போரில் முழுமையாக தாக்கப்பட்ட ஜப்பான் இன்று ஏனைய நாடுகாளுக்கு முன் உதாரணமாக காணப்படுகிறது. காரணம் உற்பத்திகள் அதிகம் அது ஏற்றுமதிக்கே. வீட்டுக்கொரு துவிச்சக்கரவண்டி தமது கலாச்சார உணவு பொதுப்போக்குவரத்து உடல்உழைப்பு தேவையற்ற விடயங்களை நாடாமை என்பன அவர்களை முன்னெற்றியுள்ளது. நாங்கள் ஜப்பான் உற்பத்தி செய்த தொலைக்காட்சிக்கு முன்னால் இந்திய சின்னத்திரை நாடகங்களின் அடிமைகளாக வீட்டிற்கு இரண்டு மோட்டார் சைக்கிள். கார் ஒன்று என தேவைக்கு அதிகமாக வாழ்ந்து வாழ்க்கையை சுமையாக்குகிறோம் எனத்தெரிவித்தார்.
