வவுனியா- பம்பைமடுவில் தீப்பிடித்து எாிந்த தனியாா் பேருந்து.
வவுனியா- பம்பைமடு பகுதியில் தனியாா் பேருந்து ஒன்று திடீரென தீ பிடித்து எாிந்துள்ளது. எனினும் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனா்.
இச் சம்பவம் இன்று காலை 10.15 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. செட்டிக்குளத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பேருந்திலேயே
பம்பைமடு பகுதியில் வைத்து தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.பேருந்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாகவே பேருந்தின் எஞ்சின் பகுதியில் இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக
ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவருகிறது.எனினும் பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரும் எவ்வித பாதிப்பும் இன்றி தெய்வாதீனமாக தப்பியுள்ளனா்.