வவுனியாவை நாட்டின் தலைநகர் ஆக்குவேன்!! -ஜனாதிபதி வேட்பாளர் அறைகூவல்-
ஜனாதிபதியாக நான் தெரிவு செய்யப்பட்டால் வடமாகாணத்தில் உள்ள வவுனியா நகரை நாட்டின் தலைநகரமாக மாற்றுவேன் என்று இலங்கை சோசலிச கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அஜந்தா பெரேரா அறைகூவல் விடுத்துள்ளார்.
தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
யுத்தகாலத்தில் வவுனியாவில் பணியாற்றியிருந்தமையினால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து நன்கு தெரியும். ஆகையாலேயே அவர்களை நான் ஆதரிக்கின்றேன். மேலும் ஏனைய பகுதிகளைக் காட்டிலும் வவுனியாவில் அனைத்து வளங்களும் உள்ளன.
எனவே வவுனியாவை நாட்டின் தலைநகரமாக்குவது சிறந்தது. அந்தவகையில் நாட்டின் ஜனாதிபதியாக வரும்போது, அதனை நான் செய்வேன்.
தமிழர்களின் கோரிக்கைகளை அவர்களின் விருப்பத்துக்கு ஏற்றவாறு நிறைவேற்றிக்கொடுக்கவும் தயாராக இருக்கின்றேன் என்றார்.