வவுனியாவை கலக்கிய இரு கொள்ளையா்கள். மடக்கியது பொலிஸ்.
வவுனியா மாவட்டத்தில் பல்வேறு கெள்ளை சம்பவங்களுடன் தொடா்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டுவந்த இரு கொள்ளையா்கள் தற்செயலாக பொலிஸாாிடம் சிக்கியுள்ளனா்.
வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் தொலைபேசி,பணம், மடிக்கணினி என்பவை திருடப்பட்டு ள்ளதாக கடந்த வருடம் வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம்
விசார ணைகளை முன்னெடுத்திருந்தனர். இதன் போது செக்கட்டிபுலவு, பூவரசங்குளம் பகுதியில் நேற்று இரவு நடமாடிய இருவரை வழிமறித்து சோதனை மேற்கொண்ட போது
சந்தேகமடைந்த பொலிஸார் இருவரையும் கைது செய்ததுடன் இவர்களிடமிருந்து கைத் தொலைபேசிகளும், மடிக்கணனியும் கைப்பற்றியுள்ளதாகவும்
இப் பொருட்கள் தாண்டிக்குளத்தில் திருடப்பட்டதற்கான கைத்தொலைபேசியின் IME இலக்கம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாகவும் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும் இவ்வாறு திருட்டுச் சம்பவம் ஏதேனும்
இடம்பெற்றிருந்தால் உடனடியாக முறைப்பாட்டினை மேற்கொள்ளுமாறும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.