வவுனியாவில் 7 பெண்களுக்கு பாலியல் தொற்று
வவுனியாவில் பாலியல் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 7 பெண்களுக்கு பாலியல் தொற்று நோயான கொணோரியா மற்றும் ஹேர்ப்பிஸ் நோய்கள் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் இன்று தெரிவித்துள்ளனர்.
குறித்த 7 பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் வவுனியா நகரம் மற்றும் தேக்கவத்தை பகுதியைச சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.
குறித்த பாலியல் நோய்களானது பாலியல் தொடர்பின் மூலம் பரவக் கூடியது. எனவே அவர்களுடன் பாலியல் தொடர்பில் ஈடுபட்டோர் வவுனியா வைத்தியசாலையில் எச்.ஐ.வி.தடுப்புப் பிரிவிற்கு சென்று மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.