Thu. May 30th, 2024

வவுனியாவில் 15 வயதுச் சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்ததையடுத்து 20 வயது பெண், 3 இளைஞர்கள் உட்பட 4 பேர் கைது

வவுனியாவில் 15 வயதுச் சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்ததையடுத்து 20 வயது பெண், 3 இளைஞர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட தேக்கவத்தை பகுதியில் உள்ள விடுதி ஒன்றிலேயே இச்சம்பவம் நடைபெற்றதாக தெரிய வந்துள்ளது.
குறித்த சிறுமி வவுனியா பண்டாரிக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.
குறித்த சிறுமியின் தாய் சிறுமியில் ஏற்பட்ட உடலியல் மாற்றத்தை அடுத்து கூட்டு வன்புணர்வில் ஈடுபடுத்தப்பட்டமை தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சிறுவர் பிரிவு உத்தியோகத்தரை அணுகி அவர்களின் ஆலோசனையில் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த விசாரணையை மேற்கொண்ட பொலீஸார் குறித்த சிறுமிக்கு போதை மருந்து கொடுத்து வவுனியா நகரில் தேக்கவத்தை பகுதியில் உள்ள விடுதி ஒன்றிலேயே சிறுமி கூட்டு வன்புணர்வில் ஈடுபடுத்தப்பட்டமை தெரிய வந்துள்ளது. சம்பவம் தொடர்பாக சிறுமியின் உறவினரான 20 பெண், தொலைபேசி விற்பனை இளைஞர் உட்பட 3 இளைஞர்கள் கைது செய்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்