Sat. Dec 7th, 2024

வவுனியாவில் யானை தாக்கி இளைஞன் பலி

வவுனியா – செட்டிக்குளம் கிருஸ்தவகுளத்தில், காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி இளைஞன் ஒருவன் நேற்று செவ்வாய்க்கிழமை (29) உயிரிழந்ததாக பறயநாலங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
கிறிஸ்தவகுளம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய விக்னேஸ்வரன் கேதீஸ்வரன் என்பவரே யானையின் தாக்குதலிலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
வவுனியா செட்டிகுளம், கிறிஸ்தவகுளம் பகுதியில், இருவர் காட்டுக்குச் சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றள்ளதாக பொலஸார் மேலும் தெரிவித்தனர்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை பறயநாலங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
முல்லைத்தீவில் கடந்த 2 தினங்களில் இருவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்