வவுனியாவில் நீர்விநியோக தடை இன்றுமுதல்
நீர் விநியோகத்தில் தடை ஏற்படும்
வவுனியாயாவின் சில பகுதிகளில் நீர் விநியோகத்திற்கு தடை ஏற்படும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகால் அமைச்சு அறிவித்துள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள வரட்சி காரணமாக குளங்களில் நீர் வற்றுகிறது. இதனைக் கருத்தில் கொண்டே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன் படி இன்று முதல் காலை 5 மணி தொடக்கம் 9 மணி வரைக்கும் மாலை 4 மணி தொடக்கம் இரவு 9 மணி வரையான நேரங்களில் நீர் விநியோகத்தில் தடை ஏற்படும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகால் அமைச்சு அறிவித்துள்ளது.