வவுனியாவில் திடீா் சோதனை! ஸ்கானா் இயந்திரங்களை பயன்படுத்தியும் சோதனை.
ஈரப்பொியகுளம் பொலிஸ் நிலையம் முன்பாக இன்று காலை பொலிஸாா் தீவிர சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டிருக்கின்றனா்.
அதற்கமைய கண்டி நெடுஞ்சாலை ஊடாக செல்லும் பொதுப்போக்குவரத்து வாகனங்கள் உட்பட தனியார் வாகனங்களை மறித்து இன்று பொலிஸார்
தீவிர சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனரென எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். அத்துடன் பொதிகள் சோதனை கூடத்தில்
பயணிகளின் பொதிகளை ஸ்கானர் இயந்திரம் ஊடாக சோதனைக்கு உட்படுத்தினர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலையே
இவ்வாறு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
