வவுனியாவில் டிப்பர் விபத்து,சாரதி படுகாயம்
வவுனியா மடுகந்தையில் இன்று (08) அதிகாலை டிப்பர் வாகனம் ஒன்று மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் வாகனத்தின் சாரதி படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹெப்பற்றிகொலாவ பகுதியிலிருந்து வவுனியாவுக்கு மணல் ஏற்றிக்கொண்டு சென்ற டிப்பர் வாகனமே மடுகந்தை பாடசாலைக்கு அண்மையில் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்ததால் பனை மரமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்தானது இன்று அதிகாலை 4.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சாரதியின் தூக்கக்கலக்கத்தினாலேயே இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்