வவுனியாவில் குழந்தையுடன் சென்ற தாய்க்கு நேர்ந்த கதி

வவுனியா நகரில் மோட்டார் சைக்கிளில் வீதியால் என்ற பெண்ணின் குழந்தை கத்தி காட்டி பயமுறுத்தி நகை மற்றும் மோட்டார் சைக்கிளையும் அபகரித்து சென்றுள்ளதாக வவுனியா பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச் சம்பவம் இன்று புதன்கிழமை அதிகாலை இடம் பெற்றுள்ளது.
வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்கு முன்பாக உள்ள கடவுச் சீட்டுக்கு செல்லும் வீதியில் இடம் பெற்றுள்ளது.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
கடவுச் சீட்டு வழங்கும் நிறுவனத்திற்கு முன்பாக விண்ணப்பம் நிரப்பும் தொழிலில் ஈடுபடுபவர் தனது தொழில் நிமித்தம் அதிகாலை தனது குழந்தையுடன் வேலைக்கு சென்று கொண்டிருக்கும் போது வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்கு முன்பாக உள்ள பிரதான வீதியில் முகம் மூடி அணிந்த மூவர் பெண்ணை வழிமறித்து அவரின் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து அவரிடம் இருந்த நகைகளையும் மோட்டார் சைக்கிளையும் அபகரித்து சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பாக வவுனியா பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.