வவுனியாவில் ஏற்பட்ட மோதலில் இரண்டு இளைஞர்கள் பலத்த காயம்
வவுனியா குருமன்காடு பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இரண்டு இளைஞர்கள் பலத்த காயம் அடைந்துள்ளார்கள். காயமடைந்த இருவரும் வவுனியா வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
நேற்றைய தினம் இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியதாலேயே இந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது . இரண்டு குழுக்களும் கத்திகள் மற்றும் வாள்கள் கொண்டு மோதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த மோதலின் காரணமாக 7 பேர் பொலிஸாரினால் கைது செயப்பட்டுள்ளார்கள். இவர்கள் 20-30 வயதுக்கு இடைப்பட்டவர்கள்