வவுனியாவில் இராணுவத்தினரின் பயிற்சி நடவடிக்கை , மக்கள் மீது கடும் சோதனை நடவடிக்கை
வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் பெருமளவு இராணுவத்தினர் குவிக்கபட்டு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது பொதுமக்கள் மத்தியில் அச்சநிலையை உருவாக்கியது.
இன்று காலை இடம்பெற்ற இந்த நடவடிக்கையில் , குறித்த பகுதியில் இராணுவ சோதனை சாவடிகள் அமைக்கபட்டு பெருமளவான துப்பாக்கி ஏந்திய இராணுவத்தினர் குவிக்கபட்டிருந்தனர். இதனால் பொதுமக்கள் மிகவும் அச்சத்திற்கு உள்ளானார்கள்.
இது ஒரு பயிர்ச்சி நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டதாக பின்னர் ராணுவத்தினரால் தெரிவிக்கப்பட்டது
இருந்த போதிலும் இந்த நடவடிக்கையின் மக்கள் மீது கடுமையான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கபட்டதாகவும் , தமது இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்ததாகவும் பொதுமக்கள் விசனம் தெரிவித்திருந்தனர்.