வல்வை வலைப்பந்தாட்ட தொடர் நேதாஜி அணி சம்பியன்

வல்வை விளையாட்டுக் கழகம் நடாத்தும் வலைப்பந்தாட்ட தொடரில் நேதாஜி அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
இதன் இறுதியாட்டம் நேற்று வியாழக்கிழமை வல்வை தீருவில் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது.
நேதாஜி அணியை எதிர்த்து உதயசூரியன் அணி மோதியது.
ஆட்டம் ஆரம்பம் முதல் இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்களல்ல என்பதனை நிரூபிக்கும் முகமாக விளையாடிக் கொண்டிருந்தனர். இருப்பினும் ஆட்ட நேர முடிவில் நேதாஜி அணி 11:10 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.