Sat. Apr 11th, 2026

வல்வெட்டித்துறையில் டெங்கு பரவல் 13 ஆதன உரிமையாளர்களுக்கு சட்ட நடவடிக்கை

வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட டெங்கு பரிசோதனையில் 15 ஆதன உரிமையாளர்களுக்கு சிவப்பு அறிவித்தல் வழங்கப்பட்டதுடன், 13 ஆதன குடியிருப்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் டெங்கு கட்டுப்பாட்டு செயற்றிட்டமானது இன்று புதன்கிழமை பருத்தித்துறை நகரசபையினர், பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் மற்றும் பருத்தித்துறை பிரதேச செயலகத்தினர் இணைந்து வீடுகள் தோறும் களத்தரிசிப்பு மேற்கொண்டனர். இதன் போது 514 ஆதனங்கள் பரிசோதிக்கப்பட்டது. இதன் போது 133 இடங்கள் நுளம்பு பரவக்கூடிய சூழலாக இனங்காணப்பட்டதுடன் 15 ஆதன உரிமையாளர்களுக்கு சிவப்பு அறிவித்தல் வழங்கப்பட்டதுடன் நுளம்பு குடம்பிகளுடன் சுற்றாடலினை பேணிய 13குடியிருப்பாளர்களிற்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed