Mon. May 18th, 2026

வல்வெட்டித்துறையிலும் லஞ்சீற் பாவனை முற்றாகத் தடை

வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள உணவு கையாளும் நிலையங்களிலும், திருமண மண்டபங்களிலும், அன்னதான மடங்களிலும் லஞ்சீற் பாவனை முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதுடன் அதனை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இன்று வெள்ளிக்கிழமை முடிவெடுக்கப்பட்டது.
வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் எல்லைக்குட்பட்ட உணவு கையாளும் நிலையங்களினது உரிமையாளர்களுக்கான லஞ்சீற் பாவனை முற்றாகத்தடை செய்யும்  கலந்துரையாடல் இன்று
வல்வெட்டித்துறை நகரசபை
உபதவிசாளர் தலமையில் வல்வெட்டித்துறை பொது மண்டபத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலின் போதே இத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
மேலும் லஞ்சீற் பாவனை தடை தொடர்பான விழிப்புணர்வு துண்டுப்பிரசுரமும் உணவக உரிமையாளர்களிற்கு விநியோகிக்கப்பட்டது.
மேலும் 2026 ஆம் ஆண்டிற்கான  வியாபார உரிமங்கள் மார்ச் 31 இற்கு முன்னர் அனைவரும் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது. இக்கலந்துரையாடலில் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் பொதுச்சுகாதார பரிசோதகர் ப. தினேஸ் கலந்து கொண்டு வியாபார நிலையங்களின் உரிமையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் தொடர்பாகவும் விளக்கமளித்தமை குறிப்பிடத்தக்கது.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed