வலைப்பந்தில் தேசியத்தில் சாதித்த யாழ்மாவட்ட இளைஞர் அணி
34 வது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் ஓர் அங்கமான வலைப்பந்தாட்ட போட்டியில் யாழ் மாவட்ட அணி சம்பியன் கிண்ணத்தையும், பெண்கள் அணி வெண்கல பதக்கத்தையும் கைப்பற்றினர்.
குறித்த போட்டிகள் கொழும்பு மகரகம தேசிய இளைஞர் மைதானத்தில் 23,24 திகதிகளில் நடைபெற்றன.
இதில் ஆண்கள் அணி கால் இறுதியில் காலி மாவட்ட அணியினை 34:14 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டு அரை இறுதியில் களுத்துறை மாவட்ட அணியினை 36:20 என்ற அடிப்படையில் வெற்றி கொண்டு இறுதி போட்டியில் கேகாலை மாவட்ட அணியுடன் 31:26 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி கொண்டு தங்க பதக்கத்தினை பெற்றுக்கொன்டது
இதில் பெண்கள் அணி கால் இறுதியில் மன்னார் மாவட்ட அணியினை 28:16 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டு அரை இறுதியில் பலம் பொருந்திய கொழும்பு மாவட்ட அணியுடன் 38:32 என்ற அடிப்படையில் தோல்வி அடைந்து மூன்றாம் இடத்திற்கான போட்டியில் களுத்துறை மாவட்ட அணியுடன் 31:25என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி கொண்டு வெண்கல பதக்கத்தினை பெற்றுக்கொன்டது.