Sun. Jul 21st, 2024

வலைப்பந்தில் சாதித்தது யாழ்ப்பாண கல்லூரி

வலிகாமம் கல்விவலய பாடசாலைகளுக்கிடையிலான பெண்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டியில் யாழ்ப்பாண கல்லூரி அணி சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டனர்.

இதன் இறுதியாட்டம் அண்மையில் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
16 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான
இறுதியாட்டத்தில் யாழ்ப்பாண கல்லூரி அணியை எதிர்த்து அராலி சரஸ்வதி இந்துக் கல்லூரி அணி மோதியது.
முதல் பாதியாட்டத்தில் இரு அணிகளும் சம பலத்துடன் மோதிய போதிலும் அராலி சரஸ்வதி இந்துக் கல்லூரி அணி 6:5 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இடைவேளைக்குப் பின்னரான ஆட்டத்தில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய யாழ்ப்பாண கல்லூரி அணி 12:7 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர். மூன்றாமிடத்தை சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி அணி பெற்றது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்