வலுதூக்கல் மாணவர்களுக்கான கெளரவிப்பு

யாழ்ப்பாணம் வெளிச்சம் வாழ்வியல் வளர்ச்சி அமைப்பினரால் வலுதூக்கல் மாணவர்கள் கெளரவிப்பு நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு புனித பத்திரிசியார் கல்லூரி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாணம் வெளிச்சம் வாழ்வியல் வளர்ச்சி அமைப்பின் தலைவர் எஸ்.பி.பீற்றர்போல் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக யாழ் பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி குமாரசாமி கேதீஸ்வரன், சிறப்பு விருந்தினராக யாழ் கல்வி வலய உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.சாரங்கன், சிறப்பு விருந்தினராக நல்லூர் பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் செல்வரெட்ணம் சத்தியன் ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர்.