Fri. Feb 7th, 2025

வலி.கிழக்கு பிரதேச சபையால் 1000 மரக்கன்றுகள் நாட்டும் திட்டம் அங்குரார்ப்பணம்

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால் நிலை பேண்தகு அபிவிருத்தி இலக்குகளில் பருவ கால மாற்றத்தினால் ஏற்படும்  பிரச்சினைகளை எதிர்கொள்வதற்காக 1000 மரக்கன்றுகள் நாட்டும் திட்டத்தின்  அங்குரார்ப்பண வைபவம் இன்று செம்மணி வீதியில் நடைபெற்றது.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் செயலாளர் இராமலிங்கம் பகீரதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் உள்ளுராட்சி ஆணையாளர், செ.பிரணவநாதன் அவர்களின் பங்குபற்றுதலுடன் வடமாகாண கௌரவ ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களினால் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில்  நல்லூர் பிரதேச சபையின் செயலாளர் யு.ஜெலீபன் அவர்களும் மற்றும் நலன்விரும்பிகள்,பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்