வலிந்து காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை மூடுமாறு தொடர்ச்சியான போராட்டம்
யாழ்ப்பாணத்தில் உள்ள காணாமல் போனோர் தொடர்பிலான வடமாகாண அலுவலகத்தை மூடுமாறு கோரி தொடர்ச்சியான போராட்டம் ஒன்றை வலிந்து காணாமல் போனோரின் உறவுகள் மேற்கொண்டுவருகின்றனர். இந்த போராட்டமானது இன்று மதியம் கல்வியங்காட்டில் அமைந்துள்ள காணாமல் போனோர் தொடர்பிலான பிராந்திய அலுவலகத்திற்கு முன்பாக ஆரம்பமானது. காணாமல் போனோருக்கான யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தை யாழ்ப்பாணத்தில் திறப்பதற்கு பலத்த எதிர்ப்புக்கள் இருந்த நிலையில் இந்த நிலையம் ஆனது அவசரம் அவசரமாக கடந்த மாதம் எந்தவித முன்னறிவித்தலும் இன்றி திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது