வலிந்து காணாமல் போனவர்களின் உறவுகளுக்கு 6,000 ரூபா மாதாந்த கொடுப்பனவு-அமைச்சரவை அனுமதி
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக சான்றிதழைப் பெற்றுக்கொண்டுள்ளவர்களுக்கு மாதாந்தம் 6 ஆயிரம் ரூபா இடைக்கால நிவாரண கொடுப்பனவாக வழங்குவதற்கு அமைச்சரவை இன்று அனுமதியளித்துள்ளது.
தேசிய ஒருமைப்பாடு அரசகரும மொழிகள், அமைச்சர் மனோ கணேசன் மற்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் இந்த அமைச்சரவை பாத்திரத்தை சமர்பித்திருந்தனர்.
இதற்கு அமைச்சரவை அனுமதி வழக்கியதையடுத்து ,எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி முதல் ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி பணத்தை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
காணாமல் போன ஆட்கள் தொடர்பான அலுவலகத்தின் அறிக்கையை கருத்திலெடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், தெரியவருகிறது.
இதனிடையே
காணாமல் போன உறவினர்களின் குடும்பங்களினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களுக்காக ,காணாமல் போனதை உறுதிப்படுத்தி சான்றிதழை வழங்குமாறு பதிவாளரின் திணைக்களத்திற்கு உத்தரவை பிறப்பிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதனிடையே இதுவரை 500 குடும்பங்கள் இந்த சான்றிதழை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் , காணாமல் ஆக்கப்பட்டவர்களை மாரணமானவர்கள் என்று கருதியே இந்த சான்றிதழ் வழங்கப்படுவதாக கருதி , இதற்கு விண்ணப்பிப்பதற்கு பல குடும்பங்கள் பின்நிற்பதாகவும் தகவல் ஏற்கனவே வெளிவந்திருந்தது