வலிகாமம் கல்வி வலய பூப்பந்து உடுவில் மகளிர் கல்லூரி சம்பியன்

வலிகாமம் கல்வி வலய பாடசாலைகளுக்கு இடையிலான 16 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான பூப்பந்தாட்ட போட்டியில் உடுவில் மகளிர் கல்லூரி அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
வலிகாமம் கல்வி வலய பாடசாலைகளுக்கு இடையிலான பூப்பந்தாட்ட போட்டிகள் மானிப்பாய் இந்துக் கல்லூரி உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இதில் 16 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான பூப்பந்தாட்ட போட்டியின் இறுதியாட்டத்தில் உடுவில் மகளிர் கல்லூரி அணியை எதிர்த்து உடுவில் மான்ஸ் வித்தியாலய அணி மோதியது. இதில் உடுவில் மகளிர் கல்லூரி அணி 2:1 என்ற செற் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.