Mon. Dec 4th, 2023

வலிகாமம் கல்வி வலயம் வடமாகாணத்தில் முதலிடம்

வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான தடகளப் போட்டியில் வலிகாமம் கல்வி வலயம் 1ம் இடத்தையும்  பெற்றுக் கொண்டனர்.

வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான தடகள தொடர் கடந்த 30ம் திகதி தொடக்கம் இன்று வரை தொடர்ந்து 5 நாட்கள் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இதில் ஒட்டு மொத்தமாக புள்ளிகளின் அடிப்படையில் வலிகாமம் கல்வி வலயம் 657 புள்ளிகளைப் பெற்று 1ம் இடத்தையும்,
மன்னார் கல்வி வலயம் 634.5 புள்ளிகளைப் பெற்று 2ம் இடத்தையும்,
யாழ்ப்பாண கல்வி வலயம் 434 புள்ளிகளைப் பெற்று 3ம் இடத்தையும்
வடமராட்சி கல்வி வலயம் 357.5 பெற்று 4ம் இடத்தையும்,  மடு கல்வி வலயம் 321 புள்ளிகளைப் பெற்று 5ம் இடத்தையும்
கிளிநொச்சி தெற்கு கல்வி வலயம் 233 புள்ளிகளைப் பெற்று 6ம் இடத்தையும்
முல்லைத்தீவு கல்வி வலயம் 198.5 புள்ளிகளைப் பெற்று 7ம் இடத்தையும்,
துணுக்காய் கல்வி வலயம் 104.5 புள்ளிகளைப் பெற்று 8ம் இடத்தையும்,
கிளிநொச்சி வடக்கு கல்வி வலயம் 71 புள்ளிகளைப் பெற்று 9ம் இடத்தையும்
தென்மராட்சி கல்வி வலயம் 69 புள்ளிகளைப் பெற்று 10ம் இடத்தையும்
வவுனியா தெற்கு கல்வி வலயம் 64 புள்ளிகளைப் பெற்று 11ம் இடத்தையும்
தீவகம் கல்வி வலயம் 44 புள்ளிகளைப் பெற்று 12ம் இடத்தையும்
வவுனியா வடக்கு கல்வி வலயம் 30 புள்ளிகளைப் பெற்று 13ம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்