வலிகாமம் கல்விவலய வலைபந்தாட்ட போட்டி முடிவுகள்

வலிகாமம் கல்விவலய பாடசாலைகளுக்கிடையிலான வலைப்பந்தாட்ட போட்டியின் இறுதியாட்டங்கள் கடந்த திங்கட்கிழமை சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
16 வயதுப் பிரிவினருக்கான போட்டியில் முதலாமிடத்தை யாழ்ப்பாண கல்லூரி அணியும் இரண்டாமிடத்தை அராலி சரஸ்வதி இந்துக் கல்லூரி அணியும் மூன்றாமிடத்தை சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி அணியும் பெற்றன.

18 வயதுப் பிரிவினருக்கான போட்டியில் முதலாமிடத்தை அராலி சரஸ்வதி இந்துக் கல்லூரி அணியும், இரண்டாமிடத்தை சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி அணியும் மூன்றாமிடத்தை தெல்லிப்பளை யூனியன் கல்லூரி அணியும் பெற்றன.

20 வயதுப் பிரிவினருக்கான போட்டியில் முதலாமிடத்தை சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி அணியும், இரண்டாமிடத்தை அராலி சரஸ்வதி இந்துக் கல்லூரி அணியும் மூன்றாமிடத்தை உடுவில் மகளிர் கல்லூரி அணியும் பெற்றன.