வலிகாமம் அரிச்சுவடி முன்பள்ளியின் செயற்பட்டு மகிழ்வோம் விழா
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால் நிர்வகிக்கப்படுகின்ற ஆவரங்காலில் அமைந்துள்ள அரிச்சுவடி முன்பள்ளியின் செயற்பட்டு மகிழ்வோம் விழா எதிர்வரும் 2024.07.26ஆந் திகதி வெள்ளிக்கிழமை பி.ப.2.30 மணிக்கு முன்பள்ளி முன்றலில் நடைபெறவுள்ளது.
அரிச்சுவடி முன்பள்ளி ஆசிரியர் திருமதி.சிறீறங்கன் சியாமளா தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பா.தனபாலன், சிறப்பு விருந்தினராக வலிகாமம் கிழக்கு பிரதேச சபை செயலாளர் இ.பகீரதன், கெளரவ விருந்தினராக வலிகாமம் கிழக்கு பிரதேச சபை பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் சு.சிவானந்தஜோதி ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர்.