வரலாற்று சாதனையை பதிவு செய்தது முல்லைத்தீவு மாவட்டம்
வடமாகாண மாவட்டங்களுக்கு இடையிலான விளையாட்டு விழாவில் முல்லைத்தீவு மாவட்டம் இரண்டாம் இடத்தைப் பெற்று தமது புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளது.
13வது வடமாகாண விளையாட்டு விழா கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இதில் சனத்தொகையில் அதிகரிப்பையும் விளையாட்டுகளில் நவீன உபகரணங்கள் மற்றும் ஏராளமான பயிற்சியாளர்களையும் கொண்ட யாழ் மாவட்டம் 91 தங்கப் பதக்கங்கள், 55 வெள்ளி பதக்கங்கள், 43 வெண்கலப் பதக்கங்கள் உட்பட 189 பதக்கங்களை கைப்பற்றி முதலிடத்தைப் பெற்றனர்.
ஆனால் சனத் தொகை குறைந்த நவீன விளையாட்டு உபகரணங்கள் இன்றியும் குறைந்த பயிற்சியாளர்களையும் கொண்டு இவ்வாண்டு முல்லைத்தீவு மாவட்டம் 34 தங்கப் பதக்கங்கள் 43 வெள்ளி பதக்கங்கள், 49 வெண்கலப் பதக்கங்கள் உட்பட 126 பதக்கங்களை கைப்பற்றி இரண்டாம் இடத்தை பெற்று சாதனையை பதிவு செய்தனர். கிளிநொச்சி மாவட்டம் 27 தங்கப் பதக்கங்கள் , 2 வெள்ளி பதக்கங்கள், 32 வெண்கலப் பதக்கங்கள் உட்பட 92 பதக்கங்களை கைப்பற்றி மூன்றாம் இடத்தையும், வவுனியா மாவட்டம் 19 தங்கப் பதக்கங்கள் 24 வெள்ளி பதக்கங்கள் 25 வெண்கலப் பதக்கங்கள் உட்பட 85 பதக்கங்களை கைப்பற்றி நான்காமிடத்தைம், மன்னார் மாவட்டம் 18 தங்கப் பதக்கங்கள் 32 வெள்ளி பதக்கங்கள் 25 வெண்கலப் பதக்கங்கள் உட்பட 75 பதக்கங்களை கைப்பற்றி ஐந்தாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.