Fri. Mar 29th, 2024

வரலாற்று சரிவை சந்தித்த எண்ணெய்விலைகளை 30%க்கு மேல் சரிவு

சவுதி அரேபியா ஒருகால நட்பு நாடான ரஷ்யாவிற்கு எதிராக எண்ணெய் விலை யுத்தத்தை நடத்தியதன் மூலம் சந்தையை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது . இதனால் வெள்ளிக்கிழமை 10% விலை சரிவை சந்தித்த எண்ணெய் விலைகள் மீண்டும் பின்னர் ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் வரலாற்று சரிவை சந்தித்தது.

கச்சா எண்ணெய் சந்தை பங்கை மீண்டும் கைப்பற்றும் முயற்சியில் சவூதி அரேபியா சந்தையை கச்சா வெள்ளத்தில் மூழ்கடிக்க முயற்சிப்பதாக வர்த்தகர்கள் கருதுகிறார்கள் , இதனால் அமெரிக்க எண்ணெய் விலை 27% வரை குறைந்து பீப்பாய் 30 டாலராக சரிந்தது, மேலும் உலகளாவிய அளவுகோலான ப்ரெண்ட் கச்சா 22% சரிந்து 35 டாலராக இருந்தது.
இரண்டு எண்ணெய் விலைகளும் 1991 ஆம் ஆண்டு இடம்பெற்றதை போன்று ஒரு மோசமான விலைசரிவை சந்தித்துள்ளன.
ஒபெக் மற்றும் ரஷ்யா இடையே வெள்ளிக்கிழமை எண்ணெய் கூட்டணி வெடித்த பின்னர் இந்த கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் இலங்கையிலும் எண்ணெய்விலைகளில் பாரிய மாற்றம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்